ஆஸ்திரேலியாவிற்கு சுலபமாக விசா!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (16:44 IST)
ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் சுலபமாக விசா பெறும் வகையில், ி.எஃப்.எஸ். குளோபல் நிறுவனத்தை விண்ணப்பங்கள் பெறும் பணிக்காக ஆஸ்திரேலியத் தூதரகம் நியமித்துள்ளது.

இந்நிறுவனம் முக்கிய நகரங்களில் உள்ள தனது கிளைகள் மூலம் விசா விண்ப்பங்களைப் பெறுகின்ற பணியைச் செய்யும்.

விசா பெறுமமுறை பற்றிய விவரங்கள், விண்ணப்பங்கள் போன்ற தேவைகளுக்கான இந்நிறுவனத்தின் மையங்களை அணுகலாம். முதல் கட்டமாக கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், சண்டிகர், மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் செயல்பட் துவங்கும்.

தொலைபேசி, மின்னஞ்சல் மூலமோ அல்லது நிறுவனத்தின் முகவர்கள் மூலமோ நாம் சேவையைப் பெறலாம். படிப்பு, வியாபாரம், சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் இடம்பெயர்தல் போன்ற எல்லாத் தேவைகளுக்கும் விசா விண்ணப்பங்களை இங்கு பெறலாம் என்று ஆஸ்திரேலியத் தூதரகம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்