நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார்

Webdunia

திங்கள், 10 செப்டம்பர் 2007 (11:09 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை நாடு திரும்பினார்.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்து நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்கினார்.

நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் வருவதையொட்டி விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பலத்த சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் வருகையால் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அவைகள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருகின்றனர் என்று விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் வந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் நேற்று இரவே கைது செய்யப்பட்டனர்.

நவாஸ் ஷெரீப்புடன் அவரது கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் விமானத்தில் வந்தனர்.

விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், "நாங்கள் புறப்பட்டுவிட்டோம். எங்களை யாரும் தடுக்க முடியாது" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்