ஹைதராபாத் குண்டு வெடிப்பு : பாக். மறுப்பு

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (15:54 IST)
ஹைதராபாத் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் கரம் செயல்பட்டுள்ளதாக இந்தியாவின் குற்றச்சாட்டை தாங்கள் மறுப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தஸ்லிம் அஸ்லாம், இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் உறுதியுடன் போராடுகிறோம். இதுபோன்ற சம்பவங்களை நன்கு புலனாய்வு செய்வது நல்லது. அதைவிட்டுவிட்டு பின்னணியில் யாரென்று எல்லாம் கற்பனை செய்யக் கூடாது என்று கூறினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவும் - பாகிஸ்தானும் ஏற்படுத்திய கூட்டு நடவடிக்கை அமைப்பு என்னவானது என்று கேட்டதற்கு, 3 மாதத்திற்கு ஒரு முறை அந்த அமைப்பு சந்திக்க வேண்டும் என்றும், அதற்கு கூடுதல் செயலரை பாகிஸ்தான் நியமித்த பிறகு இந்திய அதிகாரி அவருடன் தொடர்பு கொண்டு தேதியை நிர்ணயிப்பார் என்று தஸ்லிம் அஸ்லான் பதிலளித்துள்ளார்.

கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வணிகத்தை ஊக்குவிப்பது தொடர்பாக பாகிஸ்தானின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் கமல்நாத் கூறியிருந்தது குறித்து கருத்து கேட்டதற்கு, அது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு புறங்களிலும் உள்ள காஷ்மீரிகள் சுதந்திர வர்த்தகத்திற்கு உதவிடும் வகையில் சரியான திசையில் அந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்