பெங்களூரு மருத்துவர் ஹனீப் விடுதலை

Webdunia

சனி, 28 ஜூலை 2007 (11:38 IST)
ஹனீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஸ்ட்ரேலிய தரப்பில் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து நேற்று அவர் விடுதலையானார்.

இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு வெடிப்பு சதி திட்டம் தொடர்பாக பெங்களூரு மருத்துவர் ஹனீபை ஆஸ்ட்ரேலிய காவல் துறையினர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவர் ஹனீப் மீதான் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் டாமியன் பக் நேற்று அறிவித்தார். வழக்கு திரும்ப பெறப்பட்டதால் ஹனீப் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார்.

எனினும் அவருடைய விசா ரத்து செய்யப்பட்டு இருப்பதால் ஹனீப் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என ஆஸ்ட்ரேலிய குடியமர்வு துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்