பாபூர் ஏவுகணை : பாகிஸ்தான் சோதனை!

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (12:58 IST)
700 கி.மீ. வரையிலான தரை இலக்குகளை தாக்கவல்ல பாபூர் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது!

அணு ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கவல்ல பாபூர், குரூஸ் மிசைல் என்றழைக்கப்படும் இலக்கை நோக்கி செலுத்தத்தக்க ஏவுகணையாகும்.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 500 கி.மீ. தூர இலக்குகளை தாக்கவல்லதாக இருந்த பாபூர் ஏவுகணையின் திறன் 700 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இதுவரை சோதித்துள்ள மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும், இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது பாபூர் ஏவுகணை என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பாபூர் மட்டுமின்றி, கோரி, ஷாஹின், காஸ்னவி, அப்தாலி ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவைகளில் ஷாஹின்-2 ஏவுகணை 2000 கி.மீ. தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கவல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்