123 ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Webdunia

சனி, 21 ஜூலை 2007 (11:40 IST)
இந்திய - அமெரிக்க இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று இரவு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்திய -அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு நடைமுறைக்குக் கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இரு நாடுகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்" என்று அந்த கூட்டறிக்கை கூறுகிறது.

அணு சக்தி குறித்த ஒப்பந்ததை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இரு நாடுகளுமே ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் துணைப் பேச்சாளர் டாம் க·பி கூறினார்.

123 ஒப்பந்தம் மிக முக்கியமானது, ஆனால் அது எப்பொழுது இறுதி செய்யப்படும் என்று கூற இயலாது. குறுகிய எதிர்காலத்தில் அது நிறைவுபெற்றுவிடும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம் என்றும் க·பி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்