பிரேசில் நாட்டில் சாபாலோ நகர விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி கட்டடத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 200 பலியாகியுள்ளனர்.
டெம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 என்ற விமானம் 170 பயணிகளுடன் சாபாலோ நகர விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது.
அங்கு பெய்த மழையின் காரணமாக ஓடுதளம் ஈரமாக இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழுக்கி தாறுமாறாக ஓடியது.
விமான நிலைய தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அந்த விமானம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்த கட்டடத்திற்குள் புகுந்தது. விமானத்தின் பெரும் பகுதி அந்த கட்டடத்திற்குள் புகுந்ததால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டன. இதில் விமானத்தில் இருந்த பயணிகள், கட்டடத்தில் இருந்தவர்கள் உள்பட 200 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.