இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்றுள்ள தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையிலான குழு, அமெரிக்க அரசின் உயர்நிலை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இக்குழு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, தெற்காசிய பாதுகாப்பு ஆகியன குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வாஷிங்டன் செய்தி கூறுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செயலர், ராபர்ட் கீட்ஸ் தலைமையிலான குழுவுடன் தேசப் பாதுகாப்புத் துறை ஆலோசகா நாராயணன், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென், அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வர 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பாக இன்று இரவு முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள இந்தியக் குழு, 123 ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஒப்பந்தம் உருவாக்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.