இராக்கில் நேற்று நடந்த இரு வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இராக்கின் வட பகுதியில் உள்ள கிர்குக் நகரில் பொதுமக்கள் நடமாடட்ம் மிகுந்த சந்தைப் பகுதியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி ஒன்று வெடித்தது. இதில் அங்கிருந்த பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அவ்வழியாக வந்த பேருந்தில் இருந்த பயணிகளும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் அதே நகால் நெரிசலான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் வெடித்தது.
இந்த இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் மொத்தம் 80 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 136 பேர் காயமடைந்தனர்.