வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (12:50 IST)
வங்கதேசத்தின் பிரதமராக இருந்தபோது வணிக நிறுவனம் ஒன்றை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அந்நாட்டு முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டுள்ளார்.

1996 முதல் 2009ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தபோது 3 வணிக நிறுவனங்களை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், தற்பொழுதுள்ள அரசின் தலைமை ஆலோசகர் ·பக்ருதின் அகமது அரசியல் ரீதியாக நடந்த கொலையில் ஷேக் ஹசீனாவிற்கு தொடர்புள்ளது என்று அளித்த புகாரின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் 300 முதல் 400 காவலர்களைக் கொண்ட படை ஷேக் ஹசீனாவின் இல்லத்தை சுற்றிவளைத்து, பின் அவரை கைது செய்ததாகவும், அவரை டாக்கா குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

(யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்