இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து

Webdunia

திங்கள், 9 ஜூலை 2007 (15:13 IST)
இந்தியா வங்கதேசம் இடையே நேரடி ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்தியா வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்க கடந்த 2001 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த திட்டத்திற்கான வெள்ளோட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் நேற்று தாகா போய் சேர்ந்தது. இந்த ரயிலில் மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர்.

கொல்கத்தாவிற்கும் தாகாவிற்கும் இடையே தினசரி ரயில் சேவை தொடங்குவது குறித்து இந்திய வங்கதேச அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அடுத்த மாதம் இந்தியா வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்