தாக்கவரும் விண் இலக்குகளை விண்ணிலேயே எதிர்கொண்டு இடைமறித்து அழிக்கவல்ல எஸ்.400 எனும் புதிய வகை ஏவுகணையை அடுத்த வாரத்தில் சோதிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது!
தரையில் இருந்து 400 கி.மீ. உயரம் வரையில் வரக்கூடிய ஏவுகணைகளை இடைமறித்து இந்த ஏவுகணை அழிக்கவல்லது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ரியாநோவோஸ்தி கூறியுள்ளது.
எஸ்.400 ஏவுகணை சோதனைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், வெற்றிகரமான சோதனைக்குப் பின் அது ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் ரஷ்ய ராணுவத்தின் துணைத் தளபதி அலெக்சாண்டர் கோர்கோவ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு ஏவுகணையைப் போல இரண்டு மடங்கு திறன் கொண்டது எஸ்.400 என்று கூறப்பட்டுள்ளது.