அமெரிக்க கிராம மேயராக இந்தியர்

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (10:22 IST)
அமெரிக்காவின் லாரல் ஹாலோ என்ற கிராமத்தின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லாரல் ஹாலோ என்ற கிராமத்தின் மேயராக அர்விந்தர் எஸ். ஆனந்த் என்பவர் இன்று பதவி ஏற்க உள்ளார்.

லாரல் ஹாலே கிராமத்தில் 3 விழுக்காட்டினர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவகளாவர். இவர்கள் தேர்ந்தெடுத்த அர்விந்தர் எஸ். ஆனந்த் சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறிய ஆனந்திற்கு வயது 46. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்