குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமான நிறுவனங்களின் விமான சேவையை அதிகரிப்பதை இந்தியா அனுமதிக்கவில்லை.
இது குறித்து இரு நாட்டு விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
விமான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த்தை இந்தியா மீறுவதாக குவைத் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஜூலை 1ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் எதவும் குவைத் நாட்டிற்கு வரக் கூடாது என்று அறிவிக்க திட்டமிட்டது.
இந்நிலையில் தற்போது 2ம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியதை அடுத்து, இந்திய அரசின் இந்தியன், ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு மட்டும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.