விரைவில் 123 ஒப்பந்தம்: மன்மோகன் சிங் - புஷ் உறுதி

Webdunia

சனி, 9 ஜூன் 2007 (12:41 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர, விரைவில் 123 ஒப்பந்தத்தை இறுதி செய்வது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதி பூண்டுள்ளனர்.

ஜி 8 மாநாட்டுக்கு இடையே சந்தித்து பேசிய மன்மோகன் சிங்கும் புஷ்சும், 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உள்ள வேறுபாடுகளை தாண்டி, அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கும் உகந்த, ஏற்றுக்கொள்ளதக்க உடன்பாட்டை காண்பது என்று ஒப்புக்கொண்டுள்ளதாக அயலுறவுச் செயலர் சிவங்கர் மேனன் கூறினார்.

123 ஒப்பந்தத்தை உருவாக்குவது சாத்தியம் தான் என்றும், விரைவில் உடன்பாடு ஏற்படும் என்றும் சிவசங்கர் மேனன் கூறினார்.

அமெரிக்கா அளிக்கும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்திய பிறகு, மீட்கப்படும் கழிவை, மறு ஆக்கம் செய்வதற்கு தனி மையத்தை அமைத்து, அதனை சர்வ தேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை இந்தியா முன் வைத்ததை இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.




வெப்துனியாவைப் படிக்கவும்