கொழும்புவின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயம் அடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த செய்தியை இலங்கை ராணுவ போர்ப்படையினர் மறுத்துள்ளனர். 3 வீரர்கள் பலியாயினர் என்றும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு இடையே உள்ள ராணுவ தளங்கள் மீது நேற்று முன் தினம் இரவு ( சனிக்கிழமை ) தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கை போர்ப்படைக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், போர்ப்படை முகாம்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி அவைகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சண்டை நேற்று வரை ( ஞாயிற்றுக் கிழமை ) நீடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.