கடற்படைத் தளம் மீது கடற்புலிகள் தாக்கு: 35 வீரர்கள் பலி!

யாழ்ப்பாணத்தின் மேற்குப்புறத்தீவுகளின் தொலைவில் உள்ள நெடுந்தீவின் தென்பகுதியில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை கடற்புலிகள் இன்று தாக்கினர். இதில் 35 இலங்கை கடற்படை வீரர்கள் பலியாயினர்.

இன்று காலை 15 படகுகளில் வந்த கடற் புலிகள், கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 3 படகுகள் தற்கொலைப் படகுகள் என்று குறிப்பிடப்பட்டிந்தன என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், இந்த தாக்குதலில் 8 அல்லது 10 வீரர்கள் மட்டுமே பலியாகியிருப்பர் என்றும், 35 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகள் இன்று அதிகாலை 12.45 மணியளவில் நடத்திய தாக்குதலில், கடற்படை வீரர்கள் 35 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கள் தரப்பில் 4 புலிகள் பலியாயினர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையன் வன்னியில் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய கடற்புலிகள் அங்கிருந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு தளத்திற்கு திரும்பிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்