ஓய்வு பெறும் 60 வயதை கடந்த பின்னரும், பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அந்த நாட்டின் அதிபர் முஷாரப் நீடிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதாஹிதா மஜ்லிஸ் அமல் கூட்டணியின் தலைவரும், ஜமாத் இ- இஸ்லாமி கட்சித் தலைவருமான ஹூசைன் அஹமது இதற்கான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக பதவி வகிப்பவர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் ஆனால் 2003 ஆகஸ்ட் மாதத்தோடு 60 வயதைக் கடந்துவிட்ட அதிபர் முஷாரப் அப்பதவில் தொடர்ந்து நீடிப்பதாக கூறினார்.
மேலும், தனது சுயநலத்துக்காக ராணுவத்தை அவர் பயன்படுத்துவதால் அரசியல் சட்டம் மற்றும் நீதித்துறை கேலிக் கூத்தாகி விட்டதாக தெரிவித்தார்.