இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று அவர் பிரதமர் பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுகிறார்!
இங்கிலாந்தில் பிரதமர் டோனி பிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது. புதிய பொருளாதார கொள்கை மற்றும் ஈராக் போர் ஆகியவற்றால் பிரதமர் டோனி பிளேருக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து தமது பதவியை விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக டோனி பிளேர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தை அவர் இன்று கூடியது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் டோனி பிளேர் தனது ராஜினாமா முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
டோனி பிளேருக்கு நெருக்கமானவரும் நிதி அமைச்சருமான கார்டன் பிரவ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1 ஆம் தேதியுடன் டோனி பிளேர் தனது 10 ஆண்டுகால பிரதமர் பதவியை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.