இந்தியாவில் 1500 புலிகளே உள்ளன

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:05 IST)
ராஞ்சி: இந்தியாவின் காடுகளில் மொத்தம் 1500 புலிகளே உள்ளன என்று தேசிய புலிகள் பேணிகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. ஏனெனில் 6 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 3,ம்652 ஆக இருந்தது.

தேசிய புலிகள் பேணிகாப்பு ஆணையமும் டெஹ்ராடூனில் உள்ள இந்திய வன உயிரிகள் நிறுவனமும் இந்த ஆய்வை கூட்டாக நடத்தியுள்ளன.

இந்த ஆவ்யின் படி தற்போது இந்தியாவில் மொத்தம் 1500 புலிகளே உள்ளன. ஆனால் ஜார்கண்ட், சுந்தர்பான்ஸ் வனங்களில் புலிகள் எண்ணிக்கை இந் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் வேட்டையாடப்படுவது உட்பட, தரமற்ற அதன் வாழுமிடங்கள், அது வேட்டையாடி உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கை குறைவு என்று புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு காரணங்கள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது.

புலிகள் அதிகம் வாழும் பகுதியாக 4 பகுதிகளை இந்த ஆய்வு எடுத்துக் கொள்கிறது. உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய பகுதிகளில் நிரவி உள்ள ஷிவாலிக்-கங்கை சமவெளிப்பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை 297 ஆக உள்ளது. இதில் உத்தரகாண்ட் பகுதியில் மட்டும் 178 புலிகள் உள்ளன.

இரண்டாவது நிலப்பகுதி ஆந்திரா, சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், மராத்தியம், ஒரிசா, ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மானில வனப்பகுதிகளில் 601 புலிகள் உள்ளன. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் 300 புலிகள் பேணிகாக்கப்பட்டு வருகின்றன.

கர் நடாகா, கேரளா, தமிழ் நாடு வனப்பகுதிகளில் 402 புலிகள் உள்ளன. இதில் கர் நாடகாவில் மட்டும் 200 புலிகள் உள்ளன.

இவ்வாறு இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்