வெப்ப வாயு வெளியேற்றம் அதிகரிப்பு!

புதன், 19 நவம்பர் 2008 (10:32 IST)
40 நாடுகளில் கிரீன் ஹவுஸ் வாயு என்று அழைக்கப்படும் வெப்வாயு வெளியேற்றம் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

2000 முதல் 2006 வரை 40 நாடுகளில் வெப்வாயு வெளியேற்றம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி காணும் தொழில் முன்னேற்ற நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றம் 2000 முதல் 2006 வரையிலான காலக் கட்டத்தில் 7.4 விழுகாடு அதிகரித்துள்ளது.

1997ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறு தொழில் முன்னேற்ற நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு ஒத்துக்கொண்ட அளவிற்குக் கீழ் உள்ளது என்று ஐ.நா. அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்