புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!

திங்கள், 6 அக்டோபர் 2008 (12:40 IST)
இந்தியாவில் உள்ள புலிகளுக்கான 30 சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை 1,411 ஆக குறைந்துள்ளது. இது 1972 கணக்கீட்டின் படி 1800ஆக இருந்தது.

புள்ளிவிவர அறிக்கைகளின் படி 1900 ஆம் ஆண்டு இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன என்று உதகமண்டலத்தில் "டைகர் டைகர்" என்ற தலைப்பில் சமீபத்தில் கண்காட்சியை நடத்திய சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

தற்போது புலிகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு குறைந்துள்ளதற்கு காரணம் காடுகள் அழிக்கப்படுவதே என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உதகமண்டலத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் புலிகளை பாதுகாப்பதன் பல்வேறு சூழலீய தேவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் பரிணாமம், அதன் சமூக அமைப்பு, பண்பாட்டு முக்கியத்துவம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், அதன் மீதான மனிதனின் தாக்கம் ஆகியவற்றுடன் அதனை பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் வலியுறுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்