சரி என்னுடைய ஆராய்ச்சி என்னவென்று இப்போது பார்ப்போம். நான் பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி ஆழ்ந்து படித்தபோது பல விஷயங்கள் பொருத்தமானதாக இல்லை. மேலும், அவற்றிற்குச் சரியான விளக்கத்தை விஞ்ஞானத்தால் கொடுக்க முடியவில்லை. விடை கிடைக்காத கேள்விகளாக இன்றும் அப்படியே அந்த சில விஷயங்கள் இருக்கின்றன.
அவை என்னவென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றுகின்ற மூலங்கள் எல்லாம் ஜோடி ஜோடியாகத்தான் தோன்றும். தன்னந்தனியாகத் தோன்றாது. அதாவது Positive - Negative, North pole - South Pole, அது போல பொருட்களில்; பொருள்- எதிர்பொருள் (Matter - Anti matter) - இந்த எதிர்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது-. இப்படி எதிர்பொருளால் ஆனதாக இன்னொரு பிரபஞ்சம் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒளி ஏன் இவ்வளவு வேகத்தில்; விநாடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது, அதன் காரணம் என்ன?
அண்ட வெளியில் நம் சூரியனைப் போல் பல நூற்றுக்கணக்கான மடங்கு பெரிய பல கோடிச் சூரியன்கள் இருந்தும் இரவு ஏன் பகலாக இல்லாமல் இருட்டாகவே இருக்கிறது?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இன்றும் விஞ்ஞானத்தில் விடை இல்லை.
பொருட்களை பொருட்களால் அளந்து அடையாளம் காண்கிறோம். ஆனால் இந்த வெளி - காலம் (Space-Time) என்பதையும் பொருட்களால் அளந்துதான் அடையாளம் காண முடிகிறது. இப்படிப்பட்ட மாயமான ஒன்றை பொருளால் அளந்து அடையாளம் காண்பது சரியானதாக இருக்குமா? அப்படியானால் அவற்றின் தன்மை என்ன? இவையும் பெருவெடிப்பின்போதுதான் உண்டானது என்பதை எப்படி ஒத்துக் கொள்வது? என்பதுபோன்ற கேள்விகளுக்கு Standard Model என்று சொல்லப்படுகிற நாம் இது நாள் வரை கண்டுபிடித்து ஏற்றுக் கொண்டு கணக்குப் போட்டு வைத்துள்ள விஞ்ஞான இலக்கணத்தில் பதில் இல்லை.
ஆகவே இவற்றுக்கும் விடை தெரிய வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோதுதான் என்னுடைய Order of Balancing என்ற கொள்கையை என்னால் உருவாக்க முடிந்தது. எல்லாமே ஒன்றை ஒன்று சமன் செய்து கொள்ளும் என்பது இதன் பொருள் - அப்படிப்பட்ட இந்தக் கொள்கை பெரு வெடிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரு வெடிப்புக் கொள்கையின் வயது ஏறக்குறைய 60 ஆண்டுகள். இது இன்னும் கருதுகோள் (Hypothesis) என்ற நிலையில்தான் இருக்கிறது. இன்னும் உறுதியான கொள்கையாக (Theory) உருவாகவில்லை. அதை உறுதிப்படுத்துவதற்கு பல சான்றுகள் கண்டுபிடித்துக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு மாற்றான ஒரு கொள்கை மிகச் சரியாக உருவாகிவிட்டால் இந்த பிக்-பேங் கொள்கை உதறித் தள்ளப்படும்.
ஒரு கொள்கையை உருவாக்கும்போது இயற்பியலின் அடிப்படை விதிகளுக்கு அது ஒத்துப் போக வேண்டும். இது நாள் வரை விடை தெரியாத கேள்விகளுக்கு விடை சொல்வதாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் ஒன்றுடன் ஒன்று சரிபார்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த Order of Balancing என்ற எனது கொள்கை.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சூத்திரம் E=Mc^2இன் படி பொருள் என்பது அடர்த்தியான சக்தியின் வடிவம். சக்தி என்பது விரிவாக்கப்பட்ட பொருளின் வடிவம்.
இந்தப் பொருட்கள் எல்லாம் ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - பொருளாக மாறுவதற்கு முன்பு - விரிந்து பரந்த சக்தியாகவே இருந்திருக்க வேண்டும். இவைதான் அடர்ந்து பொருளாக மாறுகின்றன. அப்படி சக்தியாக இருந்த நேரத்தில் ஒளி இல்லை. பொருளுக்கு உண்டான நிறை விரிந்து பரந்த சக்திக்கும் இருந்திருக்க வேண்டும். ஆகவே இந்த அண்ட வெளியில் அவை இருள் சக்தியாக ஒரு மையத்தையும் விளிம்பையும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். இந்த இருள் சக்தி குவியும் தன்மை கொண்டது.
அப்படிக் குவியும் போது குவிமையத்தில் கணக்கிலடங்காத அடர்த்தி ஏற்படுவதால் வெப்பமும், வெப்பத்தால் மின் காந்த சக்திகளின் ஆதியும் அதனால் சக்தியை எடுத்துச் செல்லும் ஒளியும் உண்டாகி இருக்க வேண்டும். அந்த வெப்பம், சுற்றி இருக்கும் இருள் சக்தியால் (Dark Energy) இழுக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக குவார்க்குகளின் மூலங்கள் உருவாகின்றன. அணுவின் - மூலம் - ஆதி - உருவாகி இப்போது அணுவின் துகளான புரோட்டானின் உள்ளிருக்கும் குவார்க்குகளின் ஆரம்பம் தொடங்கப்பட்டு .
இவற்றுக்கு முன்னமேயே மின்காந்த சக்தி உருவாகியுள்ளதால் இந்தக் குவர்க்குகளின் மூலங்களுக்கு ஒருவித மின் சக்தி ஏற்படுகிறது. மின் சக்திகள் ஜோடி ஜோடியாகத்தான் தோற்றம் எடுக்கும் என்பதால் முதலில் தோன்றிய குவர்க்குகளின் மூலங்கள் பாசிடிவ் சார்ஜ் பெற்றிருந்தால் அந்த நொடியே நெகடிவ் சார்ஜ் பெற்ற குவார்க்குகளின் மூலங்கள் தோன்றுகின்றன. இவை இரண்டும் மோதி அழிந்து விடுகின்றன.இப்படிப் பல லட்சம் வருடங்களாக நெகடிவ் குவார்க் மூலங்களும் பாசிடிவ் குவார்க் மூலங்களும் மோதி அழிந்து கொண்டிருக்கின்றன.
தொடந்து அழிந்து கொண்டிருக்கும் பொருள் தன்னை அழியாமல் நிலைநிறுத்திக்கொள்ள வழியைத்தேடும் என்பது இயற்கை விதி. லண்டனில் சாக்கடையில் தோன்றிய புழுக்கள் வெண்மையாக இருந்த காரணத்தால் எளிதில் பறவைகளுக்கு இரையாகி அழிந்து கொண்டிருந்தன.சில வருடங்களில் அவற்றின் நிறம் சாக்கடையின் நிறத்துக்கு கருமையாக மாற ஆரம்பித்து தன் இனம் அழிவதை நிறுத்தி வாழ வழி செய்து கொண்டன. அதுபோல் எதிர் எதிர் குவர்க்குகளின் ஆதி அழிவதை நிறுத்த இவற்றிற்கு இடையில் வந்த குவர்க்கின் ஆதிக்கு பாசிடிவ் சர்ர்ஜ்சும் இல்லாமல் நெகடிவ் சார்ஜ்சும் இல்லாமல் நியூட்ரல் சார்ஜ் ஆக இருந்து விடுகிறது.
ஆகவே இதன் இரு பக்கமுள்ள குவார்க்குகளின் ஆதி அழிவு நிறுத்தப்படுகிறது.அந்த நியூட்ரல் குவார்க் ஆதி, குளுவான் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட குவார்க்குகளின் ஆதி சேர்ந்து குவார்க்காக உருவாகின்றன.இந்த குவார்க்குகள் சேர்ந்த ஒரு பகுதி பாசிடிவ் சார்ஜ் ஆன புரோட்டானாக ஆகின்றன. இப்படிப்பட்ட பாசிடிவ் சார்ஜ் புரோட்டான்கள் உற்பத்தி ஆனவுடனேயே நெகடிவ் சார்ஜ் எலக்ரான்களும் உற்பத்தி ஆகி சமன் செய்கின்றன. இந்த உற்பத்தியில் முன்னால் பின்னால் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஆனால் இந்த எலக்ரான்களுக்கு நிறை இருக்கிறதே தவிர இதன் உள்ளே குவார்க்குகள் இல்லை.
இப்படி புரோட்டான்களும்,எலக்ரான்களும் உருவானபோதே அவற்றின் ஜோடியான எதிர் புரோட்டான்களும், எதிர் எலக்ட்ரான்களும் உருவாகி தனியே பிரிந்து தனி பிரபஞ்சமாகிவிடுகின்றன.அவையே Anti Matter Universe. ஹைட்ரஜன் அணுக்கள் தோன்றி நட்சத்திரஙகள் உருவாகின்றன.சமன் செய்யும் Order of Balancing கோட்பாடுதான் பிரபஞ்ச அடிப்படை. அணுவில் நியூட்ரான் என்ற ஒன்று உண்டு.புரோட்டானுக்கோ அல்லது எலக்ட்ரானுக்கோ ஏதாவது ஆகி விட்டால் இந்த நியூட்ரான் சென்று அந்த இடத்தை நிரப்பிவிடும். அதுபோல் இந்த குவர்க்குகளுக்கு எதாவது ஆகி விட்டால் குளுவான் சென்று அந்த இடத்தை நிரப்பிவிடும். நம் விளையாட்டுகளில் பதிலி (Substitutes) என்று சிலரை வைத்திருப்போம். விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த Substitute கள் அவர்கள் இடத்தை நிரப்புவார்கள். அது போல இந்த அடிப்படைத் துகள்களிலும் இருக்கின்றன.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது எனது OOB ல் அண்டவெளியும், காலமும் சேர்க்கப்படவில்லை. Space Time என்பது தனித்துவமானது (Independent Identity) இல்லை என்பது Order of Balancing ன் கொள்கை. இப்போது காணப்படும் பொருட்களின் ஆதி உற்பத்தி ஆராயப்படுகிறது. நிறை என்பது அண்டவெளியின் மையத்தில் நசுக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாறும்போது நிறையும் வெப்பமாக மாறுகிறது. இந்த நிறை அண்டவெளிச் சுருக்கத்தின் அழுத்தத்தால் ஏற்படுகிறது. அந்த ஆதி நிறையை நாம் நுண்மை ( Nunmai) என்று அழைக்கலாம்.
இது பெரு வெடிப்பு அல்ல. சிறு வெடிப்புதான். இந்த இருள் சக்தியிலிருந்து பொருட்கள் தோன்றுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டம்தான் CMB என்கிற Cosmic Microwave Backround. நிறை என்பது இந்த அண்ட வெளியின் (Volume) பரிமாணத்தைச் சார்ந்தது. எந்தப் பொருள் இந்த அண்ட வெளியின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கிறதோ அது அதிக நிறையையும், அதன் விளிம்பை நோக்கிச் செல்லச் செல்ல குறைந்த நிறையையும் அடைகிறது.
அண்ட வெளியின் மையப் பகுதியில் இருக்கும் 10 கிலோ எடையுள்ள பொருள் அதன் விளிம்பை நோக்கிச் செல்லச் செல்ல 1 கிலோவாகி 10 கிராமாகி 1 கிராமாகி நிறையில்லாமல் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. எடை மட்டுமல்ல நிறையும் (Mass) குறைய ஆரம்பிக்கிறது. ஆக நிறை என்பது அண்ட வெளி பரிமாணத்துடன் தொடர்புடையது. ஈர்ப்பு, மின்காந்த அலைகள், அணு, வெப்பம் இவற்றை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறோமோ அப்போது இருள் சக்தி பெருமளவு குவிந்து வெளிப்படும். சக்தி ( Energy) என்ற கடலுக்குள்தான் இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது.
அந்தச் சக்தியின் அடர்த்தி கணக்கிலடங்காதது. ஒரு குண்டூசியின் தலை லட்சம் கோடி டன்களாகும். பூமியில் அதை செயற்கையாக உருவாக்கும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் பூமியை நோக்கி நகரும். அந்த நகர்தலின் செயலை ஒரு டர்பைனின் பிஸ்டனை நோக்கிச் செலுத்தினால் டர்பைனை சுழலச் செய்து மின்சாரத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும். கணக்கிலடங்காத இந்த இருள் சக்தி ஏற்கெனவே அண்டவெளியில் இருப்பதுதான். அண்டவெளி என்பது வெற்றிடம் என்று சொல்லப்படுகிறது.முழுக்க முழுக்க வெற்றிடம் என்பது இல்லவே இல்லை.அங்கு மின்காந்த அலைகளோ,ஈர்ப்பு அலைகளோ அல்லது Darkon துகள்களோ நிறைந்திருக்கும்.
இதற்கான என்னுடைய சூத்திரம் : SMDE = 0 (GEMAK) என்பதாகும். அதாவது (Super Massive Dark Energy = zero Gravity,zero ElectroMagnetism, zero Atom,zero Kelvin).
அதைப்பாதிக்கும் எதிர்க் காரணிகளை குறைக்கும்போது அது வெளிப்படுகிறது. அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம் அவ்வளவே. இது ஒரு போதும் வற்றாத சக்தி. ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றும்போது அதன் முழுப் பயனை மட்டுமல்ல மனிதனுக்குப் பாதகமான எந்த மிச்சமும் (Waste) இருப்பதில்லை. ஆகவே இதனால் ஆபத்து இல்லை. ஆனால் இவை மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அணுச் சக்தியால் கிடைக்கும் மின்சாரத்தை விட பல நூறு கோடி மடங்கு மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். முதல் கட்டமாக இந்த இருள் சக்திக்கு அடர்த்தி ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை மூலம் நிரூபித்துள்ளேன் (Experimental Proof).
மனிதன் தன்னுடைய வெப்பம் வெளிச்சம் போன்ற சக்தி தேவைகளுக்கு முதலில் விறகைப் பயன்படுத்தினான். தொழில் புரட்சி ஏற்பட்டு இயந்திரங்களுக்கு அதிக சக்தி தேவை ஏற்பட்ட போது விறகை விட அதிக சக்தியுள்ள நிலக்கரியைப் பயன்படுத்தினான். Energy தேவை இன்னும் அதிகமானபோது நிலக்கரியைவிட அதிக சக்திவாய்ந்த Fossil Fuel என்று சொல்லப்படுகிற பெட்ரோல், டீசலைக் கண்டுபிடித்து அதைப் பயன் படுத்தினான். Energy தேவை மிக மிக அதிகமான போது அதைவிட அதிக சக்தி வாய்ந்த அணுச் சக்தியை பயன்படுத்துகிறான். இவையும் போதுமானதாக இல்லை. மேலும் இவற்றிலிருந்து வெளியாகும் கழிவுகள் மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிப்பவையாக இருக்கின்றன.ஆகவே இனி வரும் Energy தேவைக்கு இந்த Dark Energy தான் கைகொடுக்கும்.
இந்த இருள் சக்தி எல்லா அடிப்படை Force களுக்கும் எதிரானது. ஒளிக்கு எதிரான சக்தியைக் கொண்டிருப்பதால் இதற்கு இருள்மை (Darkon) என்று பெயரிட்டுள்ளேன். இந்தச் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் மனித குல எரிசக்தித் தேவைக்கு முடிவான தீர்வாக அமையும்.
இந்த காஸ்மாஸின் வால்யூமால் நசுக்கப்பட்ட Dark Energy யின் அடிப்படைத் துகள்தான் Darkon என்பது. இது அண்ட வெளியிலிருந்து மையத்தை நோக்கி சுருங்கும் துகள், இதன் எதிர்த் துகளான மின் காந்தத் துகளின் போட்டானுடன் மோதும் போது அதனுடைய சக்தியை கிரகித்துக் கொள்கிறது. இந்த Dark Energy என்னுடைய OOB கொள்கையின் படி 99.9 சதம் இந்த காஸ்மாஸில் இருப்பதால் எல்லா நட்சத்திரங்களின் மின் காந்தத் துகள்கள் மற்றைய மின் காந்தத் துகள்களின் சக்திகள் இவற்றுக்குள் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.
இவை நட்சத்திரங்களை நெருங்கும்போது நட்சத்திரங்களின் மின்காந்த துகள்களின் சக்தி அந்த இடத்தில் அதிகமாக இருப்பதால் இந்த Darkonகளின் சக்தியை போட்டான்கள் கிரகித்துக் கொள்கின்றன. இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
நியூட்டனின் கூற்றுப்படி ஈர்ப்பு என்பது நிறையின் குணம். ஆனால் ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி ஈர்ப்பு என்பது அண்டவெளி நேரத்தின் குணம். (Space time property). ஆகவே நிறை என்பது அண்ட வெளி நேரத்தின் குணமாகிறது. அதாவது அண்ட வெளி நேரம் கலந்த காஸ்மாஸின் குணமாகிறது.ஆகவே நிறையை பொருட்களுக்குள் தேடுவது பயனளிக்காது என்பது எனது கொள்கை.
இந்த அண்ட வெளியில் (Space) ஒரு இரும்பாலான ஒரு அடி ஸ்கேல் ஒளியின் வேகத்திற்கு சமீபமாகச் செல்லும்போது அது ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு கோடு மாதிரி சுருங்கிவிடும். இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒளியின் வேகத்திற்கு அருகில் செல்லும் எந்தப் பொருளிலும் நேரமும் மெதுவாக ஓடும். இதுவும் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை விளக்கலாம்.
25 வயதுடைய இரட்டையரில் ஒருவரை பூமியில் விட்டுவிட்டு இன்னொருவரை ஒரு ராக்கெட்டில் ஒளிக்கு சமீபமான வேகத்தில் செல்லும்படி ஏற்றி ஐம்பது வருடங்கள் (பூமியல் உள்ளவரின் கணக்குப்படி) பறக்கவிட்டு மீண்டும் அவர் பூமிக்குத் திரும்பி வரும்போது, பூமியில் உள்ளவருக்கு 75 வயது ஆகிவிட்டிருக்கும், ராக்கெட்டில் சென்றவருக்கு 26 வயதுதான் ஆகியிருக்கும். இது உண்மையே. ஆனால் உண்மையிலேயே என்ன நடக்கிறது. அடிக்குச்சி சுருங்குகிறதா? அல்லது நேரம் மெதுவாகச் செல்கிறதா என்றால் என் OOB யின் படி இல்லை.
ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 3,00,000 கிலோ மீட்டர். இதை மீட்டரில் சொல்ல வேண்டுமென்றால் 30 கோடி மீட்டர். இந்த 30 கோடி மீட்டருக்கு மேல் ஒரு மீட்டர் அதிகமான நீளத்தில் ஒரு குழாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு பகுதியை காற்றுப் புகாமல் மூடிவிட்டு மற்றொரு பகுதியில் ஒரு சரியான பிஸ்டனைப் பொருத்துங்கள். குழாய் முழுவதும் வெற்றிடமாக்குங்கள். அந்தப் பிஸ்டனை ஒளியின் வேகத்தில் அழுத்தினால் அந்த அதிகப்படியான 1 மீட்டரில் ஒரு நிறை திரள்வதைக் காணலாம். உள்ளே இருப்பது வெற்றிடம். அதில் எப்படி நிறை உண்டாகும்? ஏனென்றால் OOB யின்படி நிறை என்பது Space time-முடன் சம்பந்தப்பட்டது. ஆகவே ஒளியின் வேகத்தில் அண்டவெளியே (Space) சுருங்குகிறது.
இப்படித்தான் மெதுவாகச் செல்லும் நேரமும். எந்தப் பொருள் ஒளியின் வேகத்தை ஒட்டி செல்கிறதோ அந்தப் பொருளின் Electron, Proton சுழற்சி இதனால் பாதிக்கப்படுகிறது. அவற்றின் வேகமும் அதிகரிக்கிறது. ஆகவே கருவிகள் மெதுவாகச் செல்வதாகத் தெரிகின்றன. மனிதன் அதனுள் இருப்பதால் அவன் உடல் உறுப்புகளும் செல்களும் விரைவில் அழிவதில்லை. இதனாலேயே மனிதனின் வயதும் அதிகரிப்பதில்லை. புரோட்டான்களின் ஆயுள் பல லட்சம் வருடங்கள் இருப்பதும், அவற்றின் அதிவேக சுழற்சியே காரணம்.
Darkon-கள் Photon-களின் சக்தியை எடுத்துக் கொள்வதால் தொலைதூர நட்சத்திரங்களின் ஒளி நமக்கு மங்கலாகத் தெரிகின்றன அல்லது கிடைப்பதில்லை, அனைத்துப் பக்கங்களிலும் இருக்கும் இந்த Darkon களின் அடர்த்தியின் ஈர்ப்புதான் ஒளியின் வேகத்துக்குக் காரணம், Darkon-களுக்கு Photon-கள் எதிர்மறை.