சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கு உள்ளபடியே எந்தத் தட்டுப்பாடும் இல்லாத நிலையில், கடந்த
webdunia photo
FILE
ஓராண்டுக் காலமாக கச்சா விலை இரண்டு மடங்கு உயர்ந்ததற்குக் காரணம், அமெரிக்க, ஐரோப்பிய முன்பேர வர்த்தகத்தில் ஊக வணிகர்கள் நடத்திய திருவிளையாடலே என்பதை பல்வேறு ஆதாரங்களை, செய்திகளை மேற்கோள் காட்டி நாம் உறுதிப்படுத்திய நிலையில் ஒரு முக்கிய கேள்வி ஒன்றை நமது வாசகர் திரு. பாஸ்கர் எழுப்பியுள்ளார்.
ஊக வணிகத்தால்தான் கச்சா விலை இந்த அளவிற்கு உயர்த்தப்பட்டதென்றால், ஊக வணிகத்தால் உயரும் சந்தை திடீரென்று விழுந்துவிடும், எனவே விலைகளும் சரிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கலாம் என்று பாஸ்கர் கூறியுள்ளார்.
உண்மைதான். ஊக வணிகர்களால் உயர்ந்த பங்குச் சந்தை ஒரு நாள் திடீரென்று சரிந்ததும், அதன் காரணமாக முதலீட்டாளர்கள் - குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் - பெரும் நட்டமடைந்ததையும் ஹர்ஷத் மேத்தா,
webdunia photo
FILE
சேட்டன் பரேக் போன்றோர் கதைகளிலிருந்து பலமுறை நிகழ்ந்ததைப் பார்த்துள்ளோம். எனவே ஊக வணிகர்களால் உயரும் சந்தை நிலவரம் நீண்ட நாள் தாங்காது என்பது உண்மையே என்பதை சந்தை வரலாறு தெரிவிக்கிறது.
ஆனால் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குக் காரணம் ஊக வணிகமே என்பது இந்தியர்களாகிய நமக்கு இப்பொழுதான் தெரிந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய பங்கு மற்றும் பண்டகச் சந்தையில் முதலீடு செய்வோருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பரவலாக இதுபற்றி நன்கு தெரிந்துள்ளது. அங்கேயும் இப்படித்தான் எதிர்பார்த்தார்கள். இந்த நீர்க்குமிழி (கச்சா விலையேற்றம்) வெடித்துவிடும் என்று. ஆனால் வெடிக்கவில்லை. தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே வருகிறது. எப்படி இது சாத்தியம்?
ஊக வணிகத்தினால் கச்சா விலை உயர்த்தப்படுகிறதா என்பதை ஆராயும் ஒரு கட்டுரை, “Speculators Manipulation of Oil Prices” என்ற தலைப்பில் எழுதப்பட்டு வலைப் பதிவு தளம் ஒன்றில் பதிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் மீது கருத்துத் தெரிவித்த வாசகர் ஒருவர், “கச்சா விலை உயர்விற்குக் காரணம் குறைவான உற்பத்தியால் ஏற்பட்ட பற்றாக்குறைதான் என்றால், அமெரிக்க தனது கச்சா எண்ணெய் பாதுகாப்பு (Security Reserve) இருப்பிலிருந்து மூன்றில் ஒரு பங்கை சந்தைக்கு விடுவித்தாலே விலைகள் வீழ்ந்துவிடுமே” என்று கூறியுள்ளார். மற்றொரு வாசகர், அதில் நான்கில் ஒரு பங்கை சந்தைக்கு திறந்து விட்டாலே விலைப்
webdunia photo
FILE
பிரச்சனை முடிந்துவிடுமே என்று கூறிவிட்டு, இது ஊக வணிகர்களால்தான் உயர்த்தப்படுகிறது என்பதையும், அப்படிப்பட்ட சந்தை சக்திகள் எந்தத் தடையுமின்றி சம்பாதிக்க அனுமதிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனமான செவ்ரொவின் பங்குகளைத் தான் வாங்கியதாகவும், ஒரே வருடத்தில் அதன் சந்தை மதிப்பு 100% உயர்ந்துள்ளதாகவும், எனவே பெட்ரோலிய விலையேற்றம் தனக்கு கவலையளிக்கவில்லையென்று ஒரு இணையவாசி கூறியுள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காரணமாக டாலரின் பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து எவ்வித கட்டுப்பாடும் அற்ற பெரும் நிதிகள் (Hedge Funds) கச்சா எண்ணெய் முன்பேர
webdunia photo
FILE
வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டதால்தான் கடந்த ஒராண்டுக் காலத்திற்கும் அதிகமாக இந்த அளவிற்கு கச்சா விலை உயர்ந்துவருகிறது. இதில் ஹெட்ஜ் ஃபண்ட் மட்டுமின்றி, சில வங்கிகளும், ஓய்வூதியம், அறக்கட்டளை போன்றவற்றின் நிதிகளையும் கூட முதலீடு செய்துள்ளதாக அமெரிக்கச் செய்திகள் கூறுகின்றன.
ஞாயிற்றுக் கிழமை ஜெட்டாவில் நடந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நமது நிதியமைச்சர் சிதம்பரம் இதனைத் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளார்.
“சந்தைத் தேவைக்கேற்ற அளவிற்கு உற்பத்தி இல்லாததால் ஏற்பட்ட பற்றாக்குறையின் காரணமாகவே கச்சா விலை உயர்ந்து வருகிறது என்ற கருத்தை நான் மரியாதையுடன் மறுக்கின்றேன். கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துவரும் விலையை தேவை - உற்பத்தி எனும் பொருளாதாரக் கோட்பாட்டை வைத்து
webdunia photo
FILE
நிச்சயம் நியாயப்படுத்த முடியாது. உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு உள்ள தேவை இந்த ஒராண்டுக் காலத்தில் பெரிதாக உயராத நிலையில், 2007 ஆகஸ்ட்டில் பீப்பாய்க்கு 70 டாலராக இருந்த கச்சா விலை இரண்டு மடங்காக உயர்ந்தது எப்படி?” என்று வலிமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
“கச்சா முன்பேர வர்த்தகத்தில் நிதி நிறுவனங்களும், ஓய்வூதிய நிதிகளும், ஹெட்ஜ் நிதிகளும் மில்லியன்களில் அல்ல... அல்ல... டிரில்லியன் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) கணக்கில் டாலர்களை முதலீடு செய்ப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. இப்படிப்பட்ட நிதிகளின் முதலீடுகள் மீது கட்டுப்பாடுகள் ஏதும் இல்லையென்பது மட்டுமின்றி, மிகவும் ரகசியாமானவை. இவைகள்தான் கச்சா பற்றாக்குறை உள்ளதாக கூறி விலைகளை உயர்த்தின. இந்த நிலையில் கச்சா உற்பத்தியாளர்கள் - குறிப்பாக ஓபெக் அமைப்பு - எண்ணெய்
webdunia photo
FILE
வர்த்தகத்தின் மீது ஆதிக்கம் செலுத்திவரம் இப்படிப்பட்ட சந்தை சக்திகளைக் கட்டுப்படுத்தி முறைபடுத்த முன்வரவேண்டும்” என்று சிதம்பரம் பேசியுள்ளார்.
நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதில் உள்ள ஒரு உண்மையை மிக ஆழமாக கவனிக்க வேண்டும். முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த ஊக வணிகர்கள் மீது அந்நாட்டில் (அமெரிக்காவில்) கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது (இப்படிப்பட்ட நிதிகள் கம்மாடிட்டிஸ் மார்கட் என்றழைக்கப்படும் பண்டகச் சந்தைகளில் முதலீடு செய்ய சட்ட பூர்வமாக அனுமதியளித்தது அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் என்று ஒரு வாசகர் நினைவு கூர்ந்துள்ளார்).
இவர்களுடைய ஊக வணிகம் எந்த அளவிற்குச் சென்றுள்ளதென்றால், உலக கச்சா எண்ணெய் தேவை 885 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ஒரு நாளில் முன்பேர வர்த்தகம் 1.2 பில்லியன் பீப்பாய் என்ற அளவிற்கு
webdunia photo
FILE
நடந்துள்ளதாம்! அதனால்தான் சந்தை யதார்த்த்த்திற்கும் விலையேற்றத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஈரான் அதிபர் அஹமதினேஜாத் கூறினார்.
நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதற்குப் பின்னர் அம்மாநாட்டில் பேசியுள்ள அமெரிக்க எரிசக்தி அமைச்சர் சாமியல் போட்மேன், முன்பேர ஒப்பந்த விலைகளை ஊக வணிகர்கள்தான் உயர்த்துகிறார்கள் என்று கூறுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.
உலகின் முதன்மை கச்சா உற்பத்தியாளரான சவுதி அரேபியாவின் அரசர் அப்துல்லா பின் அப்துல்லா, “கச்சா
webdunia photo
FILE
விலையுயர்விற்கான முக்கிய காரணிகளில், சந்தையை கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஊக வணிகர்களின் அபாயகரமான செயல்பாடும் ஒன்றாக உள்ளது” என்று வெளிப்படையாக உண்மையை உடைத்துள்ளார்.
அமெரிக்க முன்பேர வர்த்தகத்தில் மட்டுமல்ல, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய சந்தைகளில் இந்த சக்திகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்துவரும் இவ்வேளையில், தங்களிடமுள்ள பெரும் நிதிகளை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு முன்பு தங்கத்தை நாடிய இந்த சக்திகள், தற்பொழுது கச்சாவில் முதலீடு செய்துவருவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுக்கவேண்டுமென்று அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் நினைக்கவில்லை. ஏனென்றால் இந்த விலை
webdunia photo
FILE
உயர்வு ஒரு பக்கத்தில் அமெரிக்க டாலருக்கு உள்ள மதிப்பை மேலும் சரியாமல் காப்பாற்றி வருகிறது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை (நார்த் சீ கச்சா உற்பத்திக்கு) இந்த விலையேற்றம் கூடுதல் வருவாயைப் பெற்றுத் தருகிறது.
ஆகவே ஊக வணிகர்கள் முன்பேர சந்தையில் நடத்தும் திருவிளையாடல்கள் முன்னேறிய கச்சா உற்பத்தி நாடுகளுக்கு கல்கண்டாய் இனிக்கிறது. அதனால்தான் இதில் தலையிடாமல் அமைதி காத்து கமுக்கமாக சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த ஊக வணிக நீர்க்குமிழி வெடிக்கும் என்று எப்படி கூற முடியும். அரசுகளின் ஆதரவு உள்ளதால் இனி வரும் காலத்திலும் இந்த நீர்க்குமிழி மேலும் ஊதிக்கொண்டே போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனென்றால இது மிகவும் பேணி காக்கப்படும் பண நீர்க்குமிழி!