ஒகேனக்கல் : முதல்வரின் முடிவு நியாயமற்றது!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (16:18 IST)
webdunia photoFILE
காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரிலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீ‌ர் அளிக்க துவக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று தமிழக முதல்வரின் தன்னிச்சையான முடிவு அவசியமற்றது மட்டுமின்றி நியாயமற்றதுமாகும்.

இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு புதிய அரசு அமையும் வரை, ஒரு மாத காலத்திற்கு மட்டும் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறதே தவிர, திட்டம் கைவிடப்படவில்லை என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தன்னிச்சையான இந்த முடிவு எந்த அளவிற்கு அர்த்தமுடையது என்பதை ஒவ்வொரு தமிழரும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 1998ஆம் ஆண்டே மத்திய அரசின் நீர் வளத்துறையின் ஒப்புதல் பெற்று, ஜப்பானிய வங்கியின் நிதியுதவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்திற்கான துவக்க விழா கடந்த பிப்ரவரியில் நடைபெற்றபோது அதற்கு எந்த எதிர்ப்பும் கர்நாடகத்திலிருந்து எழவில்லை. எதிர்ப்பு ஏதும் எழாததற்கு காரணம், அதனால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதே.

ஆனால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் அம்மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான எடியூரப்பா, திடீரென்று ஒகேனக்கலுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, ஒகேனக்கல் கர்நாடக்கத்திற்குத்தான் சொந்தம் என்று பிரச்சனை கிளப்பினார். இதற்குப் பிறகே கன்னட அமைப்புகள் இரண்டு தமிழ்நாட்டிற்கு எதிரான போராட்டங்களை பெங்களூருவில் துவக்கின.

தென் கர்நாடகத்தில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க. இம்முயற்சியில் ஈடுபட்டது என்பது அந்த மாநில அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் மிகப்பட்டவர்த்தனமாக விமர்சனம் செய்தார். “கன்னட உணர்வைத் தூண்டி, தமிழ்நாட்டிற்கு எதிராக பிரச்சனை செய்தால் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின்படி எடியூரப்பா இப்படி நடந்துகொண்டுள்ளார்” என்று இல. கணேசன் கூறினார்.

எனவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிரான போராட்டமும், ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம் என்ற போராட்டமும் தேர்தலை கருத்தில் கொண்டு கிளப்பி விடப்பட்டவை என்பது கண்கூடாகத் தெரிந்ததனால்தான், கர்நாடக்கத்தில் எழுந்த எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

செயல்படத்தவறிய மத்திய அரசு!

இப்படிப்பட்ட அடிப்படையற்ற போராட்டம் கர்நாடகத்தில் துளிர்விட்டபோதே அம்மாநில அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கைப் பார்த்தது. அதனால்தான் அதன் எதிர் வினையாக தமிழ்நாட்டிலும் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன.எனவே கர்நாடகத்தில் வன்முறையை கட்டுப்படுத்த தவறியது அம்மாநில அரசின் குற்றம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய அரசு. காரணம், அங்கு நடைபெறுவது ஆளுநர் ஆட்சி.

இந்த நிலையில்தான் இருமாநிலங்களிலும் பிரச்சனை தீவிரமடைந்தது. அப்பொழுதும் இப்பிரச்சனையில் மத்திய அரசு வாய் திறக்கவில்லை. ஏன் வாய் திறக்கவில்லை என்று தமிழக அரசு கேட்கவில்லை. மத்திய அரசு தலையிடவேண்டும் என்று கடிதம் தமிழக முதல்வர் எழுதிய கடித்த்திற்கு மத்திய அரசு என்ன பதில் தந்தது? இதனை முதலமைச்சர் கருணாநிதி நேற்றும், இன்றும் விடுத்த இரண்டு அறிக்கைகளிலும் விளக்கவில்லை.

webdunia photoFILE
ஆனால், திட்டத்தை தள்ளிப்போடுமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் தன்னிடம் வலியுறுத்தவில்லை என்று மட்டும் கூறியுள்ளார்.

ஒகேனக்கல் திட்டத்தில் கர்நாடகத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதானே நிதர்சனம்? பிறகு அங்கு புதிய அரசு அமைவதுவரை பொறுத்திருப்போம் என்பதன் பொருள் என்ன?

ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தாரீர் என்று அங்கு புதிதாக அமையவுள்ள அரசிடம் கோரிக்கை வைக்கப்போகிறதா தமிழக அரசு?

இரு மாநில மக்களுக்கிடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்பதற்காக, ஒரு மாத காலத்திற்கு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறுகிறாரே முதலமைச்சர், புதிய அரசு அமைந்த பிறகு திட்டம் தொடரும் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அவ்வாறு கூறவில்லையே.

“அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு; அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும் - 1998-ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த்த்தின்படி இத்திட்டம் நடக்குமென்றும் - நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும் - அதற்கு நியாயம் கிடைக்குமென்று அசையாத நம்பிக்கையோடு, இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் அமைதி காப்போம்” என்கிறார்.

webdunia photoFILE
எப்படி நியாயம் கிட்டும்?

எப்படி சுற்றிச் சுற்றி வந்து பேசுகிறார் என்று பாருங்கள்! அங்கு புதிய அரசு அமைந்தால் நியாயம் கிட்டும் என்று எதிர்பார்பது எந்த வித்த்திலாவது அர்த்தம் உள்ளதா? அடிப்படையுள்ளதா?

கர்நாடக பா.ஜ.க. ஒகேனக்கல் எங்களுடையது என்கிறது, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான எஸ். எம். கிருஷ்ணா, ஒகேனக்கல் திட்டத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வோம் என்கிறார் (இன்று இரவு சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சி பேட்டியைப் பாருங்கள்), ஒகேனக்கல் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்கிறார் மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவே கெளடா. ஆக, இந்த மூன்றும்தான் அங்கு பெரிய கட்சிகள், இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஒகேனக்கல் திட்டத்திற்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடப்போகிறார்கள். இந்த நிலையில் அங்கு அமையும் புதிய அரசு நமது நியாயத்தை உணரும் என்று எதிர்பார்ப்பதாக தமிழக முதல்வர் கூறுவது உள்ளீட்டற்றது.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக தமிழ்நாட்டின் நலை விட்டுக்கொடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர். இல்லையென்றால் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு திட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக நிறுத்தி வைக்கும் முடிவிற்கு வருவாரா?

தேச ஒற்றுமை என்று கூறுகிறாரே, அதனை ஏன் மத்திய அரசு உணரவில்லை? அவர்களல்லவா நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்? மத்திய அரசு ஏன் மெளனம் சாதிக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை?

தேச்த்தின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு ஒகேனக்கல் திட்டத்தைக் கிடப்பில் போடுகிறாரே தமிழக முதல்வர், அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமர் பாலம் பிரச்சனையை பா.ஜ.க. பெரும் பிரச்சனையாக்கினால், அப்பொழுது நாட்டின் சமூக ஒற்றுமையைக் காக்க சேது சமுத்திர திட்டத்தையும் புதிய அரசு பொறுப்பேற்கும்வரை தள்‌ளிப்போட ஒப்புக்கொள்வாரா?

அரசியல் முதிர்ச்சிபெற்ற, ஆட்சி அனுபவம் அதிகம் கொண்ட தமிழக முதல்வரின் இந்த முடிவு தமிழ்நாட்டிற்கு நியாயம் கூறுவதாக இல்லை. காங்கிரஸைக் காப்பாற்ற தமிழ்நாட்டின் நலனை...