வங்கி வட்டி அதிகரிப்பு!

திங்கள், 16 ஜூன் 2008 (16:11 IST)
தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு உயர்த்தியுள்ளது.

அதே போல் வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டியும் அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வட்டி இன்று முதல் அமலுக்கு வருவதாக யெஸ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த வங்கி தற்போது வைப்பு நிதிக்கு வருடத்திற்கு 9 விழுக்காடு வழங்குகிறது. இதை 9.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு 10 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று யெஸ் வங்கியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்