வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.43/ 40.45 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ.40.47/40.48.
சிறிது நேரத்திற்கு பின், வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.47 முதல் ரூ.40.48 வரை விற்பனையானது.
கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று குறைந்தது.
வங்கிகள் அதிக அளவு டாலரை, விற்பனை செய்வதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனால் மற்ற நாட்டு செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறையும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.