டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:29 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.00/40.02 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.40.05.

பஙகுச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், பிறகு 1 டாலர் ரூ.40.00 முதல் ரூ.40.13 என்ற அளவில் விற்பனையானது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு வழங்குவதற்காக டாலர்கள் வாங்கின. ஆனால் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலர் மதிப்பு அதிகரிக்கும் என்ற காரணத்தினால் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர். அத்துடன் பங்குச் சந்தை குறியீட்டு எண் அதிகரித்து வருவதால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் வரத்து அதிகரித்தது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்