பால், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உள்நாட்டில் தாராளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும் மத்திய அரசு ஏற்றுமதிக்கான சலுகைகளை ரத்து செய்துள்ளது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால், பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மற்ற பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, இதனை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் செலுத்தும் உள்நாட்டு வரியை திரும்ப வழங்கி வந்தது.
இப்போது உள்நாட்டில் பாலின் விலை உயராமல் இருக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் தாரளமாக கிடைக்கவும் அரசு ஏற்றுமதி சலுகைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை அயல்நாட்டு வர்த்த இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலைப்புள்ளி அட்டவணையில் பால், பால் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக பால் விலை 9 முதல் 10 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. அத்துடன் கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைவதுடன், உள்நாட்டில் பால், பாலில் இருந்த தாயரிக்கப்படும் தயிர், மோர், லஸ்ஸி, ஐஸ்கிரிம் போன்ற பொருட்களின் தேவை அதிகரிக்கும்.
இதனால் பால் தேவை அதிகரிப்பதால், இது கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதும், விலையும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே பால் மற்றும் பால் பொருட்களுக்கு வழங்கிவந்த ஏற்றும்தி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூற்ப்படுகிறது. .