டாலர் மதிப்பு 3 பைசா உயர்வு!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (14:08 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்தது. 1 டாலரின் மதிப்பு ரூ.40 என்ற அளவிற்கு உயர்ந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 3 பைசா அதிகம்.

ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.40க்கும் அதிகரிக்காமல் கண்காணித்துக் கொண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அதிகரித்து டாலரின் மதிப்பு குறையும் போது, அந்நியச் செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை வாங்குகிறது.

இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்க துவங்கின. இதனால் டாலரின் மதிப்பு சரிந்தது. ஒரு நிலையில் 1 டாலர் ரூ.40 என்ற அளவிற்கு குறைந்தது.

இதன் விலை அதிகமாக இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்ய துவங்கினர். இதன் காரணமாக டாலரின் வரத்து அதிகரித்தது. பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.95/39.96 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.97/39.98.

பிறகு டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ரூ. 39.93/39.94 என்ற அளவில் விற்பனையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்