இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஹீரோ ஹோண்டா மோட்டார் பைக் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் படி ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை உயர்த்தியுள்ளது.
இது குறித்து ஹீரோ குழுமத்தின் மேலாண்மை இயக்குநரான சுனில் காந்த் முன்ஜால் செய்தியாளர்களிடம் கூறும் போது, மோட்டார் பைக் தயாரிக்க பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. இதனை சரிக்கட்டவே மோட்டார் பைக் விலை ரூ.500 முதல் ரு.1,000 வரை உயர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.