டாலர் மதிப்பில் 2 பைசா சரிவு

வியாழன், 17 ஏப்ரல் 2008 (13:02 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 2 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.93/39.94 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.95/39.96.

இன்று காலையில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அந்நிய முதலீடு வரத்து இருந்தது. அதே நேரத்தில் டாலரின் மதிப்பு சரியாமல் இருக்க, ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்தது. அத்துடன் அந்நிய வங்கிகளும் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று மத்திய அரசு வெளியிட்ட அதிகார பூர்வ புள்ளிவிபரப்படி பணவீக்கம் விகிதம் சிறிது குறைந்துள்ளது. இன்று பணவீக்கம் 7.14 விழுக்காடாக இருப்பதாக அறிவித்தது. இது சென்ற வாரம் 7.41 ஆக இருந்தது. இதனால் பங்குச் சந்தையில் சாதகமான போக்கு நிலவுவதால், அந்நியச் செலவாணி வரத்து அதிக அளவு இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.39.93 முதல் ரூ. 39.96/98 வரை விற்பனையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்