ஐ.டி.பி.ஐ வங்கி வட்டி குறைப்பு!

வியாழன், 27 மார்ச் 2008 (17:20 IST)
ஐ.டி.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்து இரு‌ப்பதாக அறிவித்துள்ளது.

இப்போது இந்த வங்கி கடனுக்கு 13.25 விழுக்காடு வசூலித்து வருகிறது. இது வரும் ஏப்ரல் 1ஆ‌ம் தே‌தி முதல் 12.75 விழுக்காடாக குறையும்.

மற்ற வங்கிகள் கடந்த மாதமே வட்டியை குறைத்து விட்டன. தற்போது கடைசியாக ஐ.டி.பி.ஐ வங்கி வட்டியை குறைத்துள்ளது.

இந்த வங்கி கொடுத்த மொத்த கடனில் 10 விழுக்காடு மட்டுமே,பிரைம் லெண்டிங் ரேட் எனப்படும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளது.

ஏற்கனவே பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு வழ‌‌ங்‌கிய கடன்கள் குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கொடுத்துள்ளது.

இந்த வங்கியும் தற்போது எல்லா வகை கடன்களையும் பிரைம் லெண்டிங் ரேட் அடிப்படையில் கொடு்த்து வருகிறது.

இந்த வங்கி கொடுத்த எல்லா வீட்டு கடனும், பிரைம் லெண்டிங் ரேட் அடிப்படையில் கொடுத்துள்ளது.
தற்போது வட்டி அரை விழுக்காடு குறைத்துள்ளதால், வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்