பணவீக்கம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.02 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 4.89 விழுக்காடாக இருந்தது.
ஆனால் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6.20 விழுக்காடாக இருந்தது.
உணவுப் பொருட்கள் உட்பட எல்லா வகை பொருட்களின் விலை 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் குறியீட்டு எண், இதற்கு முந்தைய வாரம் 218.8 ஆக இருந்தது. இந்த வாரம் 219.5 ஆக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை மொத்த சந்தையில் 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மீ்ன் விலை 6 விழுக்காடு, ஆட்டுக் கறி 5 விழுக்காடு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 4 விழுக்காடு, பால், உளுந்து, ராகி விலை 2 விழுக்காடு பருப்பு விலை 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆனால் துவரம் பருப்பு விலை நான்கு விழுக்காடு, பயத்தம் பருப்பு விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களின் விலை பட்டியலின் குறியீட்டு எண் 0.8 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 221.0 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சூரியகாந்தி எண்ணெய் வித்து விலை 11 விழுக்காடு, ஆமணக்கு எண்ணெய் விலை 6 விழுக்காடும், ரப்பர், கொப்பரை விலை தலா 2 விழுக்காடு, பருத்தி,புகையிலை விலை 1 விழுக்காடு அதிகரித்ததே. சணல் விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது.
சூரிய காந்தி எண்ணெய் விலை 8 விழுக்காடு, இறக்குமதி செய்ய்பபடும் சமையல் எண்ணெய் விலை 5 விழுக்காடு, வனஸ்பதி விலை 4 விழுக்காடு, நல்லெண்ணெய் 3 விழுக்காடு, தவிட்டு எண்ணெய், பருத்தி எண்ணெய் தலா 2 விழுக்காடு, தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் தலை 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நாட்டு சர்க்கரை விலை 2 விழுக்காடு, நெய் விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது.