நாட்டின் வைர விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 27 விழுக்காடு!
திங்கள், 28 ஜனவரி 2008 (16:55 IST)
வைரத்தை வாங்குவதில் தற்போது பெண்களிடையே உருவாகியுள்ள விருப்பத்தையும், வைரச்சந்தையில் தங்களது நிறுவனத்தின் பங்கையும் அதிகரித்துக் கொள்ள டிபியர்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது ஆண்டுதோறும் 27 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியடைந்து வருவதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சியடையும் என்றும் அந் நிறுவனத்தின் வணிக இயக்குநர் பிரசாத் காப்ரே தெரிவித்துள்ளார்.
எல்லா ஆண்களைப் போலவும் தங்கள் நிறுவனமும் பெண்களின் மனதை வைர விற்பனை மூலம் கொள்ளைக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய தங்கநகைச் சந்தையின் இன்றைய மதிப்பு ரூ.80,000 கோடியாகும். இதில் ரூ.70,000 கோடிக்கு தங்கமும், ரூ.10,000 கோடிக்கு வைரமும் ஆண்டுதோறும் விற்பனையாகின்றன.
தற்போது ஆண்டுதோறும் 27 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியடைந்து வருவதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சியடையும் என்றும் பிரசாத் காப்ரே தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள நகரங்களில், டெல்லி வைர விற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இந்த வளர்ச்சி ஆண்டுக்கு 30 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
நிதித் தலைமையகமாகவும், உல்லாசமாக வாழ்வதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் மும்பையைக் காட்டிலும் டெல்லி வைர விற்பனையில் முன்னோடியாக உள்ளது. வைர விற்பனையின் இந்த வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் வைரத்திற்கென்று ஒரு தனி பாரம்பரியமும் வரலாறும் உள்ளது.
வைரச் சந்தையில் இந்தியா மிகப்பெரிய வைரச் சந்தையாக திகழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் வைர வர்த்தகத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அதேப்போல ஆடம்பர பொருட்கள் உற்பத்தி சந்தைப் பொருட்களுக்கும் வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாவும் பிரசாத் காப்ரே தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெண்கள் வைரத்தின் அழகிலும், ஜொலிப்பிலும் நீண்ட காலமாகவே மயங்கிப் போய் கிடப்பதாக தெரிவித்துள்ளார். திருமண விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு காரணம் சமூக அந்தஸ்து, அன்பின் வெளிப்பாடாகவும் அமைந்திருப்பதுதான் என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களின் விருப்பமாக திகழ்ந்தது. இடைப்பட்ட காலத்தில் மிக அரிதாக, ஒரளவு வசதியுள்ளவர்கள் வாங்கிப் பயன்படுத்தும் அளவில் இருந்தது, இன்று சாமானிய மக்களும் ஒரு சில வைர நகைகளை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் அதிக அளவில் வைர சுரங்கங்கள் உள்ளதாகவும், அதேப்போன்று வைர நகை உற்பத்தி பட்டறைகள் நடத்தி வருவதாகவும் பிரசாத் காப்ரே தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய தீவான பொரினோவில் வைரம் கண்டுபிடிக்கப்படும் வரை, அதாவது 18 ஆம் நூற்றாண்டின் முதல் சில ஆண்டுகள் வரை இந்த மதிப்புமிக்க வைரம் கிடைக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.