எண்ணெய் கடுகு விலை அதிகரிப்பு!

வியாழன், 24 ஜனவரி 2008 (18:33 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் எண்ணெய் கடுகுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இதற்கு சென்ற வருடம் குவின்டாலுக்கு குறைந்தபட்ச விலை ரூ.1,680 என நிர்ணயித்து இருந்தது. இந்த வருடம் குவின்டாலுக்கு ரூ.55 உயர்த்தப்பட்டுள்ளது.

2008-09 ஆண்டு பருவத்தில் கொள்முதல் செய்யும் கடுகுக்கு குவின்டாலுக்கு ரூ.1,735 வழங்கப்படும். இதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும பொறுப்பை நபீட் என்ற கூட்டுறவு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அறுவடை மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் துவங்கும். எண்ணெய் கடுகு பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மேற்கு இந்திய மாநிலங்களிலேயே பயிர் செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்