வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.345/35 ஆக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.30.
பங்குச் சந்தையில் இன்று ஐந்தாவது நாளாக பங்குகளின் விலை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ததே. இதே போல் நிதி சந்தையில் கடன் பத்திரங்களையும் அதிக அளவு விற்பனை செய்தனர். இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் தேவை அதிகரித்தது. இதுவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.