இந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீடு : காபரோ திட்டம்!

வியாழன், 10 ஜனவரி 2008 (19:31 IST)
அயல்நாடு வாழ் இந்தியரும், தொழிலதிபருமான சுவராஜ் பாலின் 'காபரோ இந்தியா' நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை இந்திய ஆட்டோமொபைல் தொழில்நுட்ப துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

"அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தத் தொகை முழுவதும் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, ரூ.2 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 22 தயாரிப்பு மையங்களை அமைப்பதற்காக பூனா, சென்னை, சிங்குர் ஆகிய பகுதிகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலீடு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் தொகை மேலும் அதிகரிக்கப்படும். காபரோ குழுமத்திற்கு கிடைக்கும் பெரும்பாலான வருவாய் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) பிரிட்டன், அமெரிக்காவில் இருந்தே கிடைக்கிறத; இந்தியாவில் கிடைக்கும் 150 மில்லியன் டாலர் வருமானம் இந்த மூன்று தொழில் மையத்திற்கே பயன்படுத்தப்படும்," என்று காபரோ இந்தியா தலைவர் ஆங்கட் பால் கூறினார்.

சிறியரக கார் தயாரிப்பு திட்டம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, இந்த குழுமம் சிறிய ரக காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரும். 'சிட்டி கார்' திட்டத்தை ஐரோப்பாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதற்காக கார் தயாரிப்பாளர்களுக்கு கார் வடிவமைத்து கொடுப்பதில் காபரோ ஈடுபடும். நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்தசிட்டி கார் சொந்தமாக தயாரிக்கும் திட்டமும் உள்ளதஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்