ஹைதராபா‌த்‌தி‌ல் ‌விமான ‌பயண‌ப் ப‌திவு மைய‌‌த்தை துவ‌க்‌கியு‌ள்ளது ‌கி‌ளிய‌ர்‌ட்‌ரி‌ப்.கா‌ம்

Webdunia

செவ்வாய், 8 ஜனவரி 2008 (17:39 IST)
கி‌ளிய‌ர்‌ட்‌ரி‌ப்.கா‌‌ம் மூலமாக அனை‌த்து ‌விமான ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் சேவைகளையு‌ம் கடை‌சி ‌நி‌மிட நேர‌த்‌தி‌ல் கூட ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் வச‌தியை பய‌ணிக‌ளுக்கு அளித்தவரும் ‌கி‌ளிய‌ர்‌ட்‌ரி‌ப்.கா‌‌ம் தனது விமான பயணப்பதிவு மையத்தை ஹைதராபாத்தில் துவக்கியுள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ற்‌‌கு‌ள் எ‌ங்கு செ‌ல்ல வே‌ண்டு‌ம் என்றாலும், ஒவ்வொரு விமான நிறுவனங்களின் விமான நேரம், பயணக் கட்டணம் போன்றவற்றை ஆராய்ந்து பின்னர் நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிறுவனத்தின் விமான முன் பதிவு முடிந்திருக்கும் அல்லது விமானக் கட்டணமே உயர்ந்திருக்கும்.

இதையெல்லாம் தவிர்க்கும் வகையில் கிளியர்ட்ரிப்.காம் ஒரே இடத்தில் ஒரே-நிறுத்தம் (One-Stop) கொண்ட உள்ளூர் விமான சேவை முன் பதிவு மையத்தை ஹைதராபாத் விமான நிலையத்தில் திறந்துள்ளது. இந்த மு‌ன்ப‌திவு மைய‌ம் கடைசி நேரத்தில் விமானப் பதிவு செய்யும் பயணிகளுக்கு அதிக பயனுள்ளதாக அமையும்.

இந்த மையம் புறப்படும் உள்ளூர் விமானச் சேவையில் உடனடி முன்பதி‌வு செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது. மேலும் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் பயணிகள் செலுத்தும் பணத்திற்கு கூடுதல் மதிப்பையும் கிளியர்ட்ரிப்.காம் அளிக்கிறது.

கிளியர்ட்ரிப்.காம் மையம் விமான சேவை முன்பதிவுக் கட்டணத்தில் துவங்கி, உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல்களில் முன்பதிவு, விடுமுறை கொண்டாட்டங்கள் முதல் வாடகைக் கார் முன் பதிவு வரை அனைத்தையும் செய்து தருகிறது.

இந்த மையத்தின் துவக்க விழாவில் பேசிய கிளியர்ட்ரிப்.காம் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் மூர்த்தி, தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் விமான நிலையங்களில் ஹைதராபாத் முன்னணியில் உள்ளது. ஆண்டிற்கு 43 விழுக்காடு பயணிகளை கையாளுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் விமான பதிவு செய்வதில் 40 விழுக்காடு அளவிற்கு இங்குதான் செய்யப்படுவதையும் கண்டறிந்தோம். இந்த காரணங்களுக்காகத்தான் ஹைதராபாத்தை நாங்கள் தேர்வு செய்தோம். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். இதுபோன்ற மையங்களை மேலும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் 5வது இடமாக ஹைதராபாத் உள்ளது. மேலும், தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் விமான நிலையங்களில் முன்னணியிலும் ஹைதராபாத் விமான நிலையம் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் பயணிகளும் அதிகமாக வந்து போகின்றனர் எ‌ன்றா‌ர்.

கிளியர்ட்ரிப்பை பற்றி :

கடந்த 2006ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிளியர்ட்ரிப்.கா‌ம் துவங்கியது. பயணத்தை எளிதாக்குவதே இதன் முக்கியக் குறிக்கோளாகும். கிளியட்டிரிப், பயணிகளுக்கானது, அதிக சலுகைகளைக் கொண்டது, குழப்பமின்றி தேர்வு செய்யக்கூடியது, கட்டணங்களை செலுத்த பல்வேறு வச‌திகளைக் கொண்டது, குறைந்த கட்டணம், தகவல்களை உடனுக்குடன் அளிப்பதிலும் முதன்மையானது. ஒவ்வொரு நாளும் 6,000 பயணச்சீட்டுகளையும், 150 ஹோட்டல் அறை மு‌ன் பதிவுகளையு‌ம் செய்து வருகிறது. கிளியர்ட்ரிப்.காம் மூலமாக தொழிலதிபர்கள் விமான சேவைக் கட்டணத்தையும், சில பொருட்களின் விலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளது.

மேலும் இந்திய விமான நிறுவனங்களின் உள்ளூர் விமான சேவைகளை தேடி தங்களுக்குத் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளவும், சுமார் 3,500 உள்ளூர் ஹோட்டல் மற்றும் 75,000 சர்வதேச ஹோட்டல், விடுமுறை கொண்டாட்டங்கள், பயணத்தின்போது செல்பேசி சேவை, பயண வழிகாட்டியையும் பயணிகள் தாங்களே தேர்வு செய்து கொள்ள வழி வகுக்கிறது.

மேலும் தகவல்களுக்கு:

நைய்னா ரஸ்டோகி
கிளியர்ட்ரிப்.காம
9870402345
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்