டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (12:39 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் அதிக மாற்றமில்லை.

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய போது 1 டாலர் ரூ.39.41 முதல் ரூ.39.42 பைசா வரை விற்பனையானது. (வெள்ளி இறுதி விலை ரூ.39.42/43 )

புத்தாண்டு விடுமுறையை ஒட்டி நியுயார்க் சந்தையில் அதிகளவு மாற்றமில்லை. டோக்கியோ சந்தைக்கு விடுமுறை. அத்துடன் பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையிலும் அதிகளவு பங்குகளை வாங்குவது., விற்பனை செய்வது என்ற போக்கில் இருந்தனர். இதன் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையிலும் அதிக விற்பனை நடக்கவில்லை.

இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நிய செலாவணி மதிப்பு வருமாறு:

1 டாலர் ரூ.39.44
1 யூரோ ரூ.57.69
1 பவுன்ட் ரூ.78.73
100 யென் ரூ.34.93

வெப்துனியாவைப் படிக்கவும்