நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் புதிய ஒப்பந்தம்!

வியாழன், 20 டிசம்பர் 2007 (14:17 IST)
ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நாகர்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ரூ.307 கோடி மதிப்புள்ள இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் படி தட்சன் ஹரியானா பிஜிலி நிகாம் லிமிடெட் (வடக்கு ஹரியானா மின் விநியோக நிறுவனம்) நிறுவனத்தில் இருந்து 11 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்கான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.230 கோடி. இது 12 மாதத்தில் நிறைவேற்றப்படும்.

இரண்டாவதாக மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சியில் குடிநீர் விநியோகம் திட்டம் நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.77 கோடி. இது 27 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்