டாடா கெமிக்கல்ஸ் யூரியா உற்பத்தி அதிகரிப்பு!

திங்கள், 17 டிசம்பர் 2007 (16:24 IST)
டாடா கெமிக்கல்ஸ் யூரியா உர உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத்தரங்கு டில்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த டாடா கெமிக்கல்ஸ் மேலாண்மை இயக்குநர் ஹோமி.ஆர். குரஸ்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எங்கள் நிறுவனம் தற்போது வருடத்திற்கு 87 லட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா உற்பத்தி செய்து வருகிறது. இதை அடுத்த ஆண்டு செப்டம்பரில் 1 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப் போகின்றோம்.

அத்துடன் அடுத்த இரண்டு வருடங்களில் சோடா ஆஷ் உற்பத்தியையும் வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக உயர்த்தப் போகின்றோம்.

எங்கள் நிறுவனம் கென்யாவில் அமைத்துள்ள இரசாயண தொழிற்சாலையில் அதன் திறனில் 60 விழுக்காடு சோடா ஆஷ் உற்பத்தி செய்கிறது. இது அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் முழு அளவில் செய்ல்பட தொடங்கும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு‌ப் பின் உற்பத்தியை 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் விதத்தில் தொழிற்சாலை விரிவு படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்