டாலர் மதிப்பு 3 பைசா குறைவு

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் விழுக்காடு குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் நிலவுகிறது. இதனால் இன்று பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்தன. அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலர்கள் குவிந்தது. இதனால் நேற்றைய மதிப்பை விட இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.37/ 39.38 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது (நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.40/39.41).

வெப்துனியாவைப் படிக்கவும்