டாலரின் மதிப்பு 14 பைசா சரிவு!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (19:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகதரான டாலரி்ன் மதிப்பு 14 பைசா குறைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.75/39.76).

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.72/39.73 என வர்த்தகம் தொடங்கியது. இடையில் 1 டாலர் ரூ.39.61 முதல் ரூ.39.73 வரை வர்த்தகம் நடந்தது.

இன்று அந்நியச் செலாவணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின. பங்குச் சந்தையில் பங்கு பெறும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீட்டை வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றன. இதற்காக அந்நியச் செலாவணி சந்தையில் டாலரை வாங்கின. அத்துடன் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருந்தது. இதனால் அதிகளவு டாலரின் மதிப்பு சரியாமல் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.67 ஆக நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்தைவிட 10 பைசா குறைவு. (நேற்று நிர்ணயித்த விலை ரூ.39.77)

மற்ற அந்நிய நாட்டு நாணயங்களின் விபரம்

1 யூரோ ரூ.58.46
1 பவுண்ட் ரூ.81.78
100 யென் ரூ.35.94

வெப்துனியாவைப் படிக்கவும்