வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது. காலை 1 டாலர் ரூ.39.28/ 39.30 என்ற விலையில் விற்பணை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று இறுதி விலை ரூ.39.32/ 39.33.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்த காரணத்தினால், அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர்கள் விற்பனைக்கு வந்த காரணத்தினால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.