ஆர்சிட்பிளை பங்குச் சந்தையில் மூலதனம் திரட்டுகிறது!

செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:30 IST)
ஆர்சிட்பிளை இன்டஸ்டிரிஸ் ரூ.55 கோடி மூலதனம் திரட்டுவதற்காக பங்குகளை வெளியிட உள்ளது.

ஆர்சிட்பிளை பிளைவுட், லாமினேசன் செய்யப்பட்ட பிளைவுட், பல்வேறு வடிவமைப்புகள் பதித்த லாமினேசன் செய்யப்பட்ட பிளைவுட் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இவை அறையின் தடுப்புகள் மேஜை, நாற்காலி உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன.

இந் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பங்குச் சந்தையில் மூலதனம் திரட்ட உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு செபியிடம் கடந்த 5 ந் தேதி விண்ணப்பித்துள்ளது. இந்த பொது பங்குகள் வெளியீடப்பட்டு திரட்டப்படும் ரூ.55 கோடி கர்நாடக மாநிலத்தில் சிந்தாமணி என்ற ஊரில் லாமினேட் செய்யப்பட்ட பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூரில் ஃபைபரை கொண்டு தயாரிக்கப்படும் பலகைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க பயன்படுத்தப்படும்.

அத்துடன் இந்நிறுவனம் பல்வேறு நவீன பிளைவுட்டுகளை தயாரிக்கவும், நடுத்தர, சிறிய நகரங்களிலும் விற்பனையை விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்