17 கூட்டுறவு வங்கிகள் திவால்!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (19:47 IST)
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் (ஏப்ரல் - செப்டம்பர்) 17 கூட்டுறவு வங்கிகள் நட்டமடைந்து, திவாலா ஆகி இருக்கின்றன.

இவைகளில் 5 மகாராஷ்டிரா, 5 குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசதத்தை சேர்ந்தவை தலா 3, 1 பீகார், 1 கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவைகளாகும்.

இந்த திவாலாவான வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருந்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி வைப்புத் தொகையை திருப்பி கொடுத்துள்ளது. இது வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் பாதுகாப்பு கார்ப்பரேசனில் விதிகளின் படி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி ரூ.123 கோடியே 17 லட்சம் திருப்பி வழங்கியுள்ளது.

இதில் அதிகபட்சமாக ரூ.36 கோடியே 70 லட்சத்தை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கியான பிரபாகனி மக்கள் கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி வைத்திருந்தவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் சகாரி வங்கியின் வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.29 கோடியே 80 லட்சம், புர்னா நக்ரி சகாரி கூட்டுறவு வங்கியின் வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம், லார்ட் பாலாஜி கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.2 கோடி, யஷ்வந்த் சகாரி கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.48 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சர்வோதயா நகரிக் சகாகரி வங்கியின் வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.15 கோடியே 95 லட்சம், கர்மசாத் கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.12 கோடியே 28 லட்சம், சிந்து மெர்கன்டேல் கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.10 கோடியே 24 லட்சம், உம்ரத் நகர்ப்புற கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம், அதாரஸ் பெண்கள் கூட்டுறவு வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

2006 - 07 நிதி ஆண்டில் 25 கூட்டுறவு வங்கிகள் திவாலாவாக ஆனது. இதில் வைப்பு நிதியாக வைத்திருந்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ.438 கோடி திருப்பி வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்