சமையலெண்ணெய் இறக்குமதி நிறுத்தம்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (17:12 IST)
சமையலெண்ணெயின் விலை உள்நாட்டில் அதிகரிக்காத காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து சமையலெண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் பாமாயில், சோயா எண்ணெய் போன்ற சமையலெண்ணெயை ஸ்டேட் டிரேடிங் காப்பரேஷன், மெட்டல் அண்ட் மினரல் டிரேடிங் கார்ப்பரேஷன், நபீட் என்று அழைக்கப்படும் தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன.

அத்துடன் இந்த பொதுத்துறை நிறுவளங்கள் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்காகவும் சமையலெண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்கின்றன.

தீபாவளி பண்டிகையின் போது அதிகளவு சமையலெண்ணெய் விற்பனையாகும். இந்த பருவத்தில் சமையலெண்ணெய் விலையும் அதிகரிக்கும். உள்நாட்டு பற்றாக்குறையை ஈடுகட்டவும், விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து சோயா எணணெய், பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகிய சமைலெண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த வருடம் உள்நாட்டில் தேவையான அளவு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஆகியிருக்கின்றது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்வில்லை. இவை போன்ற காரணங்களினால் மத்திய அரசுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் சமையலெண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், நபீட் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்பு இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட 38,500 டன் சமையலெண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கூறியிருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஷேர்கான் என்ற தரகு நிறுவனத்தின் ஆய்வாளர் சர்தூல் சர்மா கூறுகையில், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், சமையல் எண்ணெய் விலை 10 கிலோ டின்னிற்கு ரூ.20 குறைந்திருக்கிறது. ரபி பருவத்தில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்ற மதிப்பீடும், சர்வதேச சந்தையில் சமையலெண்ணையின் விலை அதிகரித்தாலும் இதற்கு வரி விதிக்க கணக்கில் எடுத்துக் கொள்ள நிச்சயிக்கப்பட்டுள்ள விலை இறக்குமதி வரி குறைப்பு போன்ற காரணங்களினால் உள்நாட்டில் சமையலெண்ணெய் விலை உயராமல் உள்ளது என்று தெரிவித்தார்.

சமையலெண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்த சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கரீப் பருவத்தில் எண்ணெய் வித்துக்களின் உற்பதிதி 16.ஆயிரத்து 830 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 3,380 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் வித்து உற்பத்தி போதிய அளவு இருப்பதால் சமையலெண்ணெய் விலைகள் உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

அத்துடன் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் சமையலெண்ணெய் மீது இறக்குமதி வரி விதிக்கிறது. இந்த வரியை நிர்ணயிக்க சமையலெண்ணையின் விலையை நிர்ணயிக்கிறது. (சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் அல்லது குறைந்தாலும் அரசு நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் மட்டுமே வரி விதிக்கப்படும்). சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2006 ம் ஆண்டில் இருந்து வரி நிர்ணயிக்க அளவுகோலாக எடுத்துக் கொள்ளும் அடிப்படை விலையை அரசு அதிகரிக்கவில்லை. 2006 இல் மத்திய அரசு பாமாயிலின் இறக்குமதி வரியை 45 விழுக்காடாகவும், சோயா இறக்குமதி வரியை 40 விழுக்காடாவும் குறைத்தது.

இந்த வரி குறைப்பினாலும், விலை மாற்றம் செய்யாததால் சமையலெண்ணெய் விலை அதிகளவு உயரவில்லை.






























வெப்துனியாவைப் படிக்கவும்