மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் : சைமா!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (16:03 IST)
தமிழக அரசு ஜவுளி ஆலைகளுக்கு விதிக்கும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தென் இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கம் ( சைமா ) கேட்டுக் கொண்டுள்ளது.

“மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஜவுளி ஆலைகளுடன் போட்டியிடும் வகையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மத்திய அரசு ஜவுளித் துறைக்கு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளின் பலன்கள், இங்குள்ள ஜவுளி ஆலைகளுக்கு கிடைப்பதற்கு ஏற்ற மாதிரி மாநில அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும்.

தமிழகம் ஜவுளி துறையின் மையமாக மாறுவதற்கு உரிய முறையில் மாநில அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த புதிய கொள்கையை தயாரிப்பதற்கு முன், சங்கம் கொடுத்துள்ள ஆலோசனைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும். சிறு, நடுத்தர தொழில் பிரிவுகள் அதிகளவு வேலை வாய்ப்பை வழங்குகவதை கருத்தில் கொண்டு மாநில அரசு பெரிய தொழில் துறைக்கு அளிக்கும் முன்னுரிமைக்கு இணையான முன்னுரிமையை , இந்த பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும்.

ஜவுளி தொழில் அதிகளவு மின்சாரத்தை பயன் படுத்தும் துறையாகும். இந்த மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க ஆந்திராவிலும், ஹுமாசல பிரதேசத்திலும், அத்துடன் சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் துறைக்கு போட்டியாக உள்ள நாடுகளில் விதிக்கப்படும் அளவிற்கு மின் கட்டணத்தை தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கும் விதிக்க வேண்டும

இவ்வாறு இந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.ி.ஸ்ரீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்