கார்ப்பரேஷன் வங்கி 1 லட்சம் கோடி வைப்பு நிதி திரட்டுகிறது!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (18:06 IST)
பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி அடுத்த ஆண்டிற்குள் ரூபாய் 1 லட்சம் கோடியை வைப்பு நிதியாக திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் இந்த வங்கியின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான பி.சாம்பமுர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ந் தேதி வரை, எங்கள் வங்கியின் வைப்பு நிதி ரூ. 45,742 கோடி உள்ளது. இது கடந்த வருடத்தை விட 20.32 விழுக்காடு அதிகமாகும்.

இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் ( 2007 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ) வங்கியின் மொத்த இலாபம் ரூ. 530 கோடியாக இருக்கின்றது. இது 24.79 விழுக்காடு வளர்ச்சியாகும். முன்னனி துறை பிரிவின் கீழ் ரூ. 902 கோடியும், விவசாய கடனாக ரூ. 328 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் வங்கி அங்க அடையாளங்களை கொண்டு இயங்கும் 6 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களை நிறுவியுள்ளது. அத்துடன் 1.202 கிராமங்களில் குறைந்த பட்ச இருப்பு வைக்காத 1 லட்சத்து 11 ஆயிரத்து 796 புதிய கணக்குகளை துவக்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்